உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

41



போக்கா வருகிறேன், பேசுகிறேன், போகிறேன். இதற்கு இப்படி வம்பளப்பு நடக்கிறது. இந்த ஊரிலே கேட்டது முதல் என் மனசு சரிபடவேயில்லை. வரக்கூடாது என்று நினைச்சேன் முதலிலே. வராமல் போனா ஒஹோ விஷயம் வெளியிலே தெரிந்துவிட்டதென்று முதலியார் இப்போது போகவில்லை என்று யோசித்தபிறகு வந்தேன். நான் போய் வருகிறேன் சாமி பசங்கள் சௌக்கியந்தானே?

மிராசுதாருக்கும் அப்பாவுக்கும் ஒரு நாள் இதுபோல் பேச்சு நடந்தது. ஊரார்மீது பழி போட்டு மெதுவாகத் தமது கருத்தைத் தெரிவித்த தந்திரப் பேச்சு இது. ஊரார் வம்பளக்கவுமில்லை, மிராசுதார் வேண்டுமென்றே இப்படி ஒரு புகார் செய்து வைப்போம் என்று செய்தார். நன்றாகத் தெரிந்தது. ஆனால் நாங்கள் என்ன செய்யமுடியும்? ஊரார் வம்பளக்கிறதாகச் சொல்லுகிறீர்களே? நீங்கள் இனித் தயவுசெய்து இங்கே வரவேண்டாம் என்று அப்பா மிராசுதாரிடம் கூறமுடியுமா? கூறினால் அந்த ஆள் கோபித்துக் கொண்டு அவ்வளவு அலட்சியமா உனக்கு? என்று வைவாரே, வேலை போய் விடுமே. பிறகு பிழைப்புக்கு என்னசெய்வது?

ஒரு இரவு,அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த சம்பாஷணை வாழ்வு எவ்வளவு வேதனைக் குழியில்விழுந்து விட்டது என்பதைக் காட்டிற்று.

"விஷயம் விபரீதமாகிவிட்டதே தெரியுமோ" என்று பேச்சை ஆரம்பித்தார் அப்பா.

"என்ன சொல்லுங்கோ? என்ன விபரீதம்" என்று அம்மா அச்சத்துடன் கேட்டாள்.

"மிராசுதார்..." என்று இழுத்தாற்போல் மெதுவாக சொன்னார் அப்பா.

அம்மா பதைத்து "மிராசுதாருக்கு என்ன" என்று கேட்டாள்.

"அவனுக்கு என்ன? கல்லுப் பிள்ளையார் போலிருக்கான். மெதுவாகப் பேசடி. அவள் காதிலே விழப் போகிறது. மிராசுதாரன் நம்ம குடியைக் கெடுத்து விடுவான்