உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அறிஞர் அண்ணா



போலிருக்கு. காந்தா மீது கண் வைத்து விட்டான், இன்று காலையிலே அவன் தைரியமா, என்னிடம் சொல்லுகிறான். ஏன் சாமி நம்ம வீட்டிலே இருந்தா எவ்வளவு செல்வமாக வாழும் தெரியுமா என்று, எரிகிறது. இனி அரைக்ஷணம் இந்த ஊரிலே இருக்கப்படாது" என்றார் அப்பா.

"அம்மா ஐயோ தெய்வமே அநியாயக்காரன் அழிந்து போக அம்பிகே! நீதாண்டியம்மா துணை!" என்று கூறி அழுதார்கள். அப்பா சமாதானங் கூறினார்கள். வயோதிகப் பருவத்திலே அவர்கள் பாபம் என்னால் வதைக்கிறார்கள். நான் குடும்பத்துக்குச் சுமை மட்டுமல்ல. அவர்கள் வறிற்றுக்கே பெருந் தீ! நான் அபலை மட்டுமல்ல அபாயக்குறி!

கடன்பட்ட நெஞ்சம் கலங்காதிருக்குமா? என் அப்பா ஓர் பச்சைப் பிராமணன். அவர் பிழைக்குமிடமோ காமாந்தகாரரின் கொலுமண்டபம். அவனோ என்னைப் பெற வேண்டுமென்று ஏதேதோ சூழ்ச்சி செய்த வண்ணம் இருந்தான்.அவனுடைய உப்பைத் தின்று வளரும் நாங்கள், அவனை என்ன செய்ய முடியும்? அவனை விரோதித்துக் கொள்ளவும் முடியாது. இணங்குவதோ கூடாது. இந்நிலையில் தவித்தோம். ஆசை கொண்ட அவன், நான் அந்தணகுலமென்றோ விதவையென்றோ கருதுவானா? மேலும் காலம் எப்படிப்பட்டது! பிராமணர்களிடம் பயபக்தியுடன் இருந்தது போய், வெறுப்புடன் மக்கள் வாழும் காலம். ஆகவே மிராசுதார் நாளாகவாக, தமது எண்ணத்தை ஜாடை மாடையாகக் காட்டிக்கொண்டே வந்தார். நான் தெரிந்தும் தெரியாதவள்போல் நடந்து கொண்டேன். எங்கள் வீட்டுக்கு மிராசுதார் வேதகிரி முதலியார் வருகிறபோது, எனக்கு அடிவயிறு 'பகீர்' என்றாகிவிடும். என்னை இணங்கச் செய்ய இந்த முறை பலிக்காதது கண்ட மிராசுதாரர், வறுமையை ஏவி, எங்களை வாட்டி, சரணமடையச் செய்யத் துணிந்து விட்டார். சில்லரைக் கடன்காரர்களைத் தூண்டிவிட்டார். அவர்கள் அப்பா மீது படை எடுத்தார்கள். பல்லைக் காட்டினார் — இல்லை போ என்றார் கடன் கொடுத்தவர்கள்