உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அறிஞர் அண்ணா



சூரியனை அடங்கி ஒடுங்கி இருக்கும்படி செய்து விட்டோம். கொஞ்ச நேரம் வந்து உலவட்டுமா என்று எங்கள் அனுமதியைக் கேட்டுக் கொண்டு சூரியன் வந்து போவது போலத்தானே உதக மண்டலத்திலே இருந்தது. கண்ணுக்கும், கருத்துக்கும் இங்ஙனம் நாங்கள் விருந்து தந்து கொண்டு, வேடிக்கையாகக் காலந் தள்ளிக் கொண்டிருந்தோம்.

பாம்பாக வந்தாண்டி அவன்
    படுக்கையிலே புரண்டாண்டி
வேம்பென்று வெறுத்தேண்டி
    பின்னால் வேதனைப் பட்டேண்டி.
கண்ணன் செய்த கபடம்
    என்னை மிக கலக்கிவிட்டதடி
சொர்ண நிறமான பாம்பு
    சொகுசாக ஆடு தென்றான்
கண்ணாலே காண்போம் என்றேன்
    அது என் கன்னிப்பழம் தின்றதே

என்று 'அல்லி' பாடினாள் என்பதாக என் வீட்டுவேலைக்காரப் பெண் எனக்கு பங்களாத் தோட்டத்திலே பாடி கதை சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் கூறிய கதையைக் கேட்டுக்கொண்டு நான் என் பிரியமுள்ள குக்க நாய் டைகரின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது, யாரோ என்னைப் பார்க்க வந்திருப்பதாக வேலைக்காரன் வந்து அழைத்தான். மிராசுதார் மைசூர் ரேசுக்குப் போய் விட்டார். ஆகவே நானே வீட்டுக் காரியத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். கூப்பிடுவது யார்? என்று தெரியவில்லையா என்று வேலைக்காரனைக் கேட்டேன் இல்லை என்றான். எப்படி இருக்கிறான்? எதற்குப் பார்க்க வேண்டுமாம்? என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனேன். ஹாலில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு பேப்பரைப் படித்துக் கொண்டிருக்கக் கண்டேன். நேரே என் அறைக்குச் சென்று, அலங்காரம் ஏதாகிலும் குறைந்து விட்டதா என்று கண்ணாடியில் பார்த்துவிட்டு, ஹாலுக்கு வந்தேன். உட்கார்ந்திருத்த மனிதன் எழுந்து நின்றான். இருவரும் வாய்பிளக்க நின்றோம். என்