உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

51



புராணப் புரட்டர்கள் என்றும் தேவலோகத்தை இங்கேயே அடைய முடியும். ஏழைகளுக்கு உலகம் நரக வேதனையைத்தான் தருகிறது. உதக மண்டல உச்சியிலே வெப்பத்தை நீக்கிக் கொள்ள நாங்கள் போனபோது, "தேவலோகம்" எங்களை வரவேற்றது. நான் மகா கெட்டவள், விதவைக் கோலத்தை விட்டு விபசாரியானேன். ஆகவே 'நரகம்' எனக்கு வரும் என்று புராணீகர்கள் கூறுவார்கள். ஆனால் தேவலோகத்தில் நான் இருப்பது அவர்களுக்குத் தெரியுமோ? அழகிய பங்களா, அதை அடுத்துப் பூந்தோட்டம், அதிலே பல வர்ணப் பூக்கள், வானத்திலே மேகம் மோகன ரூபத்தில் உலாவிற்று. பனிநீர் தெளிப்பது போன்ற சிறு தூறல், பட்டு விரித்தது போன்ற பாதை, மேனகை, அரம்பையர் போன்ற மாதரின் சிரிப்பு, அருமையான சினிமா, ஆனந்தந் தரும் உண்டி வகைகள், ஆயாசத்தைப் போக்கும் கேளிக்கைகள், அடடா! உதக மண்டலத்தில் நான் கண்ட உல்லாசம், எனக்கு உச்சிமுதல் உள்ளங்கால் வரை புளகாங்கிதந்தான் இருந்தது. இவ்வுளவு சுவை வாழ்க்கையிலே இருக்கிறது. வாழ்வது மாயம், மண்ணாவது திண்ணம் உலகமே மாயை என்று கூறும் பேர்வழிகளும் இருக்கிறார்கள். யாருக்கு உலகம் மாயை, பணம் படைத்தவர்களுக்கா? சுத்த பைத்தியக்காரத்தனமான பேச்சு. உலகம் அவர்களின் ஊஞ்சல். அவர்கள் அதிலே சாய்ந்து கொண்டு ஆடிச் சல்லாபிக்கிறார்கள். அதைக் கண்டு இல்லாதவர்கள் எனக்கும் அங்கே இடங் கொடு என்று கேட்கத் தொடங்கினால் என்ன செய்வது என்று கிலி கொண்டு தந்திரமாக இந்த வேதாந்தத்தைப் போதித்து விட்டார்கள். சர்க்கரை டப்பியை குழந்தை எடுக்கப் போனால், வீட்டிலே சொல்லவில்லையா, "அதைத் தொடாதே அது மருந்து" என்று குழந்தைகள் நம்பி விடவில்லையா? அதுபோல, 'உலகம் மாயை' என்ற பேச்சை விஷயத்தை உணராதவரையில் கேட்டு நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ காய்கிற சூரியனையும் நாங்கள் ஏய்த்து விட்டோம். பேப்பரிலே படித்தோம் 110 டிகிரி, 108 டிகிரி, ஆறுபேர் மண்டை வெடித்து விட்டது, என்று வெயில் கொடுமையின் செய்திகளை. நாங்கள்