உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அறிஞர் அண்ணா



குளமாக்கிய கொடுமையை நான் மறந்தேனோ, "சரி, இவ்வளவு வெறுப்புடன் இருக்கும் உன்னிடம் நான் ஏனம்மா பேச வேண்டும். ஏதோ பாலிய சினேகமாயிற்றே என்று பேசினேன். உனக்கு இப்போது புது அந்தஸ்து வந்து விட்டது. பழைய மனுஷ்யாள் பிடிக்கவில்லைபோல் இருக்கிறது. நான் வருகிறேன்" என்று வாட்டத்துடன் சோமு கூறினான்.

போகாதே கண்ணே! என்று அவர் கையைப் பிடித்து இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொள்வேனா என்ன, போகிறேன் என்றால், செய்யுங்கள் என்றுதானே சொல்வேன். அவர் 'வாட்டம்' அவ்வளவு பெரிதா! நான் வாடிய வாட்டத்தை விடவா....?

நான் போய் வரட்டுமா? என்று மீண்டும் கேட்டார் சோமு.

ஸ்நானத்துக்கு வெந்நீர் தயாராயிற்று என்று அதே நேரத்தில் வேலையாள் சொன்னான். இதோ வருகிறேன் என்று அவனுக்குப் பதில் கூறிவிட்டு, செய்யுங்கள் என்று சோமுவுக்கும் பதில் கூறிவிட்டு, சோபாவை விட்டு எழுந்திருந்து உள்ளே போனேன். டைகர் என் கூடவே வந்துவிட்டது. சோமுவிடம் நான் நடந்து கொண்டது தவறு என்கிறீர்களா?

ஹலோ!
யாரது?
நான்தான் சோமு!
சரி,
இன்று மாலை தியேட்டருக்கு வருகிறீர்களா!
சொல்வதற்கில்லை.
சொல்லக்கூடாதா?
புறோகிறாம் தெரியாது.

காந்தா, இவ்வளவு கடுமையாக இருக்காதே என்னை நீ என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?

என்னவென்று நினைத்துக் கொள்ளவேண்டும்?

என்னை சித்திரவதை செய்கிறாய்.