உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

55



அப்படியா?
ஆமாம். ஆமாம்.
சரி; சரி.

டெலிபோனைவைத்துவிட்டேன்; சோமு பதைபதைத்துக் கொண்டிருப்பார் அந்தப் பக்கத்திலே. படட்டும், படட்டும். நான் சித்திரவதை செய்கிறேனாம். ஏன் செய்யக் கூடாது?

இது டெலிபோன் மூலம் சோமு என்னிடம் சரசமாடிக் கண்ட பலன்! சோமுவுக்கு என் போக்கு உள்ளே சுவாலையைக் கிளப்பிவிடுமல்லவா. கடைசியில் ஒரு நாள் வீட்டிற்கு வந்து வலியப் பேசத் தொடங்கினான்.

"காந்தா என்னைச் சற்று நம்பு. நான் முன்பு செய்தது தவறு. உன்னை நான் கொடுமைப்படுத்தினேன். அதை மறந்து விடு. இப்போது நான் மனமார நேசிக்கிறேன்."

நேசியுங்களேன், அதில் என்ன தப்பு? யார் வேண்டாமென்றார்கள்?

இவ்வளவு வெறுப்பாக பேசாதே காந்தா. வேலால் புண்ணைக் குத்துவதுபோல் இருக்கிறது.

என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

என்ன செய்வதா? என்மீது அந்தக் கடுமையான பார்வையைச் செலுத்தாதே. பழைய காந்தாவாக இல்லையே நீ.

பழைய காந்தாவும், புதுக் காந்தாவும். இது என்ன பித்தம்?

பித்தந்தான், ஆனால் அதற்கு நீதான் காரணம்.

நானா?

ஆமாம், என்னை நீ இன்னமும் வாட்டாதே. நீ இனி இப்படியே நடந்து கொண்டால், நான் தற்கொலை செய்து கொள்வேன்; அந்தக் காலத்தில் நீயாக என்னை மணம் செய்து கொள்ள விரும்பிய போது, நான் முட்டாள்தனமாக மறத்துவிட்டேன். வாழ்வைப் பாழாக்கிக் கொண்டேன். உன்னை இங்கு கண்டது முதல் என் மனம் ஒரு நிலையில் இல்லை.