உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அறிஞர் அண்ணா



கொள்ள நெடுநாட்கள் பிடித்தனவாம். அனுமத் உபவாசிகளாம் மாகாளியைக் கூப்பிட்டபோது வரவழைக்கும் மகா மந்திரவாதிகளாம் மற்றும் யாராரோ, சோமுவுக்கு இருந்த மதப் பித்தை சாக்காக வைத்துக் கொண்ட மட்டும் கொள்ளையிட்டுக் கொழுத்தார்களாம். பணம் குறையக் குறைய தாயின் திட்டு அதிகரித்ததாம். இவரின் புத்தியும் துலங்கிற்றாம். பிறகுதான் வடநாட்டில் உள்ள ஒரு வக்கீலின் மகளை மணந்து கொண்டு வாழ்க்கையை நடத்தினார். தாயும் காலமானார்கள். பம்பாயில் மோட்டார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு அமர்ந்தார். அதன் உதகை பிராஞ்சுக்கு சீசனுக்காக தன் மனைவியுடன் வந்திருந்த போதுதான் என்னைக் கண்டார்.

சென்னையிலிருந்து சோமு வந்த பிறகு மிராசுதார், கண்களுக்குத் தெரியாதபடிதான் எங்கள் சந்திப்பும் சல்லாபமும் இருந்து வந்தன. ஆனால் நாங்கள் மிராசுதாரின் கண்களை ஏய்த்தோமே தவிர, காதை அடைத்து வைக்க முடியுமா? மிராசுதார், அடிக்கடி என்னிடம் உறுமத் தொடங்கினார். சோமுவிடம் கூறும்போதெல்லாம், "கிடக்கிறான் தள்ளு, நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று தைரியமூட்டலானார். மிராசுதார் என்மீது கொண்டிருந்த ஆசை இந்த வதந்திகளால் மட்டும் குறைந்து விட்டதாகக் கூறுவதற்கில்லை. அவருடைய பொக்கிஷமும் வறண்டு வரத் தொடங்கிற்று. ஆகவே சோமுவிடம் நான் காசு எதிர்ப்பார்த்து நேசங் கொள்ளவில்லை என்ற போதிலும், அவராகப் பணம் தரும்போது கூறிவிட மனம் வரவில்லை. ருக்குவின் தோடும் தொங்கட்டமும், நோட்டும் ரூபாயுமாக மாறின. அவளது தங்கச் சங்கிலியும், தாழம்பூ வளையலும் என்னிடம் பண ரூபத்திலே வந்தன. இவைகளை சோமு கூறவில்லை, நான் கேள்விப்பட்டது. தனது மனைவியிடம் தொந்தரவு செய்து நகைகளைக் கழற்றி விற்று எனக்கு பணம் தருவதாகக் கூற சோமு எப்படி சம்மதிப்பார்? நான் கேட்கும்போதெல்லாம் இந்த மாதத்தில் கமிஷன் அதிகம் கிடைத்தது என்று பொய் கூறுவார். ருக்கு அவரது மனைவி, நான் இருந்திருக்க வேண்டிய இடத்தில் வந்து நின்றவள் — நகைகளை மட்டுமா இழந்தாள், பாவம் கலங்கியிருப்பாள், கதறியிருப்பாள். நான் என்ன செய்வது? நான் வாழ