பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

இல்லை, உழந்தும் உழவே தலை, உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் என்று இத்தொழில் சிறப்பித்துக் கூறப்பட்டுள் ளது. இனி இத் தொழிலை எப்படி நடத்தி, உணவைப்

பெருக்குவது என்பதை உணர்வோமாக.

2. உழவுத் தொழிலினை வேளாண்மை, பூவைசியம், கிருவி, விவசாயம் என்றும் கூறுவர். உலகில் பொருளே ஈட்டுவதற்குப் பல தொழில்கள் இருப்பினும், அவை உழவுத் தொழிலப்போல அத்துணைச் சிறந்த தொழில்கள் என்று கருதுவதற்கு இல்லை. அதனுல்தான் சீரைத் தேடின் எரைத் தேடு என்ற பழமொழி வழங்கி வருகிறது. ஏனைய தொழில்களில், பிறருக்குக் கை கட்டிப் பதில் உரைக்க வேண்டும். உழவுத் தொழிலோ எனில், பிறரை வணங்கி அவர்களுக்கு அடிமையாகிப் பிறர் உதவியைத் தேடாமல், தாம் தாமே செய்யக்கூடிய தொழிலாகும். இதல்ைதான், தொழுதுண் சுவையினும் உழுதுண் இனிது என்றும், மேழிச் செல்வம் கோழை படாது' என்றும் நம் முன்னேர் கூறியிருக்கின்றனர். இவ்வளவு சிறந்த தொழில் நம் நாட்டில் தொன்று தொட்டு நடந்து வந்திருந்தும், இதன் பெருமையை அறியாமல், பிற தொழிலில் ஈடுபட்டு மாத ஊதியத்தை நாடுகின்றனர் பலர். அப்ப்டி நாடியதால்தான், நம் நாட்டில் உணவுப்பஞ்சம் இப்பொழுது தாண்டவமாடுகிறது.

3. பயிர்த்தொழில் நடத்துபவர் நிலத்தின் தன்மை, வித்தின் இயல்பு, நிலத்திற்கு உரம் ஊட்டுதல், பயிரை வளர்த்தல், பாதுகாத்தல் ஆகியவற்றை நன்கு அறிந்தவர் களாக இருக்கவேண்டும். இவற்ருேடு உழவுக் கருவிகள், கால்நடைகள் முதலியன தகுந்தவைகளாக இருக்கப் பார்த் துக்கொள்ள வேண்டும்.