பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

கிலேயங்களையும் அமைத்து, ஏழை மக்களின் கல்வி அறிவைப் பெருகச்செய்ய வேண்டிப் பல பணக்காரர்கள் நன்கொடை கள் வழங்க வேண்டும். அரசாங்கத்தாரும் அவ்வப்போது ஆங்காங்கே நூல் நிலையங்களை ஏற்படுத்தி, வேண்டும் பண உதவி செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் நூல் கிலே பங்கள் பல தோன்றும் காட்டிலிருக்கும் அறியாமை என்னும் இருள் நீங்கும். வருங்காலத்தில் நம் தமிழ் நாடு பொருளாதாரத்திலும், நாகரிகத்திலும், கல்வியறிவிலும் மேனுட்டைவிடச் சிறப்புற்று விளங்க வேண்டுமானுல், தமிழ் மக்களாகிய அனைவரும் தங்கள் தங்கள் சத்திக்கேற்ப; மக்கள் நடமாடும் முக்கியமான விதிதோறும், குக்கிராமத் தோறும் வாசகசாலைகளே அமைப்பதற்கேற்ற பொருளுதவி செய்து, அவைகளை விருத்தியாக்குவதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருக்கப் பெருமுயற்சி எடுத்துக்கொள்ள வேண்டுவது இன்றியமையாதது.

அருஞ்சொற்பொருள் எழுபிறப்பு:மக்கள், தேவர், விலங்கு பறவை ஊர்வன, நீர் வாழ் வன, தாவரம், இடுக்கண்-துன்பம், உறுதுனே-பேருதவி, ஊனக் கண்-குற்றமுடைய கண், நூல்-புத்தகம், பணி-வேல், வனப்புஅழகு, ஐயம்-சந்தேகம்.

கேள்விகள் 1. கற்றவனுக்கும் அரசனுக்கும் உள்ள வேறுபாடு யாது: 2. கல்வியறிவைப் பெறும் வழிகள் எவை 3. நூல் நிலையம் அமைந்திருப்பதால் ஏற்படும் நன்மைகள்

யாவை?

4. நூல் கிலேயம் கடத்தப்படும் முறைகள் யாவை ? 5. பொதுமக்கள் அறிவைப் பெருக்க வழியாது?