பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

களின் துணியாகும். தேங்காய்ப் பிண்ணுக்கு உடலில் கொழுப்பைப் பெருகச் செய்யும். மணிலாக்கொட்டைப் பிண்ணுக்குக்கு மெய்யின்கண் அமைந்த தசை நார்களே இறுகச் செய்யும் இயல்பு உண்டு. பருத்திக் கொட்டைப் பிண்ணுக்குக்கு மக்களின் உடற்கூற்றின் கட்டுக்களே கன் முறையில் காப்பாற்றி வளரச் செய்யும் ஆற்றல் உண்டு. பார்த்தீர்களா, பிண்ணுக்கின் குணநலங்களே. இத்தகைய பிண்ணுக்கில் சாக்கலெட்டுச் செய்யப்பட்டால், வாய்க்கும் சுவை ஏற்படும், பொருள் வருவாயும் மிகும் அல்லவா?

5. பிண்ணுக்கை நன்கு பொடியாக்கித் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். பின்பு நன்கு கழுவித் தூய்மை யாக்க வேண்டும். அதன் பின், வேகத்தக்க அளவுப்படி தண்ணீரை ஊற்றி, அடுப்பில் ஏற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால், தண்ணீர் வற்றிப் போகும். எண்ணெய்ப் பசை இருந்தாலும் அது நீங்கிப் போக, அதனை வெயிலில் வைத்துப்பொடி செய்யவேண்டும். அப்பொடியைக் கண்ணுடிக் குப்பிகளில் இட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

6. இவ்வாறு தயாரிக்கப்பட்ட பிண்ணுக்குப் பொடி புடன் நன்கு சலித்து எடுத்துத் தூய்மை செய்யப்பட்ட கேழ் வரகு மாவு, மரிக்கன் மாவு என்னும் இரண்டு மாவையும் சம அளவு .ன் கூட்டிக்கொள்ள வேண்டும். பின்பு சர்க்கரை யைப் பாகு போலக் காய்ச்சிக்கொள்ள வேண்டும். அப் பாகில், இந்த மூன்று வகை மாவும் கலந்த கலப்புமாவைக் கொட்டிக் கிளறவேண்டும். அதன் பின்பு நெய் தடவப்பட்ட ஒரு தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். ஆறினவுடன் சிறு துண்டுகளாக அறுத்துக்கொள்ள வேண்டும். இதுவே சாக்கலெட்டு எனப்படும். இந்த மாவுடனும், சர்க்கரைப்