பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

6. பிள்ளையவர்கள் மதுரை மாநகரத்தில் வீற்றிருந்த காலம், பனி மிகுந்த மார்கழி மாதமாய் இருந்தது. ஒரு நாள் பிள்ளையவர்கள் தம் மாணவர்களுடனும், பிற நாட்டுப் புலவர்களுடனும் வைகையாற்றிற்குக் குளிக்கச் சென்ருர். அங்குச் சென்றதும், மானுக்கர்களுட் சிலரும் புலவர்களுட் சிலருமாகப் பிள்ளையவர்களுக்கு ஆணித்தாகக் குளித்துக் கொண்டும், அவரது வாயினின்றும் வரும் நகைச்சுவை ததும்பும் செய்யுட்களையும் சொற்களையும் சொற்ருெடர்களையும் கேட்டுக் கொண்டும், ஆனந்தமாகத் தங்கள் உடம்பின்மேல் நீரை இறைத்துக்கொண்டும், அவரது இன்முகம் நோக்கிய வாறு இருந்தார்கள். மற்றவர்களில் சிலர் ஆற்றங்கரையின் ஒரத்தில் நாகா பக்கமும் பரவிக் குளித்துக்கொண்டும், ஈர ஆடைகளை உலர்த்திக்கொண்டும், தங்கள் ஆசிரியரின் வாக்கு வன்மை செய்யுள் நயம், தெய்வீகக் குணங்கள் முதலியவைகளைப்பற்றி உரையாடி அவரைப் போற்றிக் கொண்டுமிருந்தார்கள். வெளியது உடீஇ திருநீறு, திருமண் அணிந்து, ஐந்தெழுத்தும் எட்டெழுத்தும் அறைபவராய்ப் பலர் இருந்தனர்.

7. பிள்ளையவர்கள் குளித்துக்கொண்டிருக்கும் இடத் திற்கருகில் இருந்த புலவர்களுள் ஆறுமுக நாவலர் என்னும் மாபெரும்புலவரும் ஒருவர் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தி விருந்து அங்கயற்கண்ணியையும் ஆலவாய் அவிர்சடைக் கடவுளேயும் கண்டு வணங்க வந்திருந்தனர். பிள்ளையவர் களேக் காணும் சந்தர்ப்பமும் இவருக்குக் கிட்டியது. இவர் சைவவேளாள வகுப்பைச் சேர்ந்தவர். தமிழை ஆர்வத் துடன் கற்றவர் இலக்கிய இலக்கணங்களில் ஈடுமெடுப்பும் அற்றவர்; உரைகயை எழுதுவதில் மிகவும் வல்லுநர். இவர் பல தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர்; அவைகளில் திருக் குறள், பரிமேலழகர் உரை, பெரிய புராணம், வில்லி பாரதம்,

|