பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

விட்டவுடன், அக் குமாஸ்தா பணத்தை எண்ணி, அதற்குரிய வரிடம் தருவார்.

8. பொருள் சேமிப்பு கிலேயம், ஒவ்வொன்றும் பிரதி தினம் வழங்கும் கணக்கில் பதிவு செய்துள்ளவர்க உண்டியல் புத்தகம் ஒன்றும், பொருள் சேமிப்பு கில்ே கணக்குப் புத்தகம் (Bank Pass Book) ஒன்றும் கொடுக் கும். இவைகளைப் பெற்றுக்கொள்பவர்கள் புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ள கணக்குகளைத் தம்முடைய கணக்கு களுடன் பரிசீலனை செய்துகொள்வர்கள். மேலும், அவர் கள் கட்டிய பணத்தைவிட அதிகப் பணம் வாங்காமலிருக்க வும் இப்புத்தகம் துணை புரிகின்றது.

9. இவ்வாறு தம் கணக்கில் உள்ள பணத்தைவிட, அதிகப் பணம் வாங்குவதை அதிக பணம் வாங்குதல் (Over Draft) என்று குறிப்பிடுவர். இங்ங்னம் அதிக பணம் கொடுப்பது சில குறிப்பிட்ட நாணயமுள்ள பெரும் பணிக்காரர்களுக்கும், வணிகர்களுக்குமேயொழிய, என யோருக்கு அன்று.

10. ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலோ, அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ, ஒவ்வொரு பொருள் சேமிப்பு நிலையத்தின் கணக்குகள் அனைத்தும் பட்டம் பெற்ற சர்க் கார் கணக்குப் பரிசோதகர்களால் (Auditors) பரிசோதிக் கப்பட்டு, அதற்கடையாளமாக கற்சாட்சிப் பத்திரம் தரப் படும். அதுவரையில் வந்த இலாபத்தில் ஒரு பகுதி விசேஷ சேமிப்பு நிதியாக (Reserve Fund) ஒதுக்கப்பட்டு, வேண்டும் சந்தர்ப்பங்களில் உபயோகிக்கப்படும். மற்றப் பகுதிகளில் அந்தந்த மாதங்களில் நடைபெற்ற செலவு களுக்கு எடுத்துக்கொண்டது போக, மீதி இலாபம் பங்கு தாரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்படும்.