பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது 

முன்னுரை

தமிழக வீரர்களுள் தனிச் சிறப்புக்கள் பல வாய்க்கப் பெற்ற பெருவீரன் கும்மந்தான் கான் சாகிபு. இலக்கியத்திலும் வரலாற்றிலும் இடம் பெற்ற அம்மாவீரனின் கதையை கலைமகளுக்குக் காணிக்கையாக 1959-ஆம் ஆண்டு மே, ஜூன் திங்கள்களில் படைத்தேன். அப்படையலே இப்போது நூல் வடிவில் வெளி வருகிறது. அளவால் சிறியதே ஆயினும், முதன் முதலாகத் தமிழில் கும்மந்தான் கான் சாகிபைப் பற்றி வரலாற்று ஆராய்ச்சி நோக்குடன் வெளி வரும் நூல் என்னும் அருமைப்பாடு உடையது.

‘கலைமகள்’ கருணைக்கும், தமிழ் மக்களின் ஆதரவுக்கும் நன்றி செலுத்தி இந்நூலை வெளியிடுகிறேன்.

இந்நூல் அச்சாகும் காலத்துத் திருத்தங்கள் செய்துதவிய ஆசிரியர்-வித்துவான்-உயர்திரு-சி. அருணை வடிவேலு முதலியார் அவர்கட்கு எனது உளங் கனிந்த நன்றி உரித்து.

வாழ்க தமிழகம்!

ந. சஞ்சீவி