உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘கலைமக’ளின் கருத்து

“தமிழ் நாட்டில் நாடோடியாக வழங்கும் நெடும் பாடல்கள் பல. அல்லியரசாணி மாலை, பவளக்கொடி மாலை, முதலிய கதைப் பாடல்கள் மக்களிடம் வேரூன்றிப் புத்தக உருவத்தில் வெளி வந்திருக்கின்றன. தேர், திருவிழாக் கடைகளில் இந்தப் புத்தகங்கள் ஏராளமாக விலையாகி வந்த காலம் உண்டு. இந்தக் கதைப் பாடல்களில் சரித்திர சம்பந்தமானவைகளும் இருக்கின்றன; தேசிங்கு ராஜன் கதை அத்தகையது. “அண்ணா வாடா தம்பி வாடா ராஜா தேசிங்கு” என்பது போன்ற பல அடிகள் தமிழ் நாடு முழுவதும் பலருடைய வாக்கிலே தவழ்கின்றன. அது போலவே கான் சாகிபு சண்டை என்பதும் ஒன்று. யூசப்கான் என்ற ஒரு வீரனுடைய கதையைச் சொல்வது அது. அவனுடைய வரலாற்றை ஆராய்ச்சி முறையில் பல நூல்களின் வாயிலாகத் தெரிந்து, திரு. ந. சஞ்சீவி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதன் முற்பகுதி ‘கும்மந்தான் கான் சாகிப்’ என்ற பெயருடன் இந்த இதழில் வெளியாகிறது. அடுத்த இதழில் இது முடிவுறும்”

-மே, 1959.