பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

குயிலும்...சாரலும்

எங்கோ ஒர் வீட்டுத் திண்ணையில் ஒரு பாகவதர் இராமாயணம் படித்துக் கொண்டிருக்கிறார். அதில் அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு வரும் காட்சியை வருணித்துக் கொண்டிருக்கிறார்.

குப்பன் தாங்கள் சஞ்சீவி மலையில் இருக்கும்போது அந்த அனுமன் வந்து மலையைத் தூக்கிக் கொண்டு போனால், தங்கள் கதி என்ன ஆகும் என்று நினைத்துக் கலங்குகின்றான்.

வஞ்சி இப்போது தன் காதலனுக்குப் பகுத்தறிவுப்பாடம் போதிக்கின்றாள். உண்மை தெளிந்த குப்பனும் வஞ்சியும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலுக்குக் கீழிறங்கி வந்து, காதல் புரிந்து மனம் களிக்கின்றார்கள்.

இது பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் கதை.

பாரதியின் குயில் கதை கனவில் நிகழ்கின்றது.

சஞ்சீவிச் சாரல் கதையோ, மாயமூலிகையின் துணையோடு நிகழ்கின்றது.

இரண்டுமே கற்பனைக் கதைகள். முன்னது, புராணப் போக்கில் அமைகின்றது. வேதாந்தம் பேசுகிறது. பின்னது புராணத்தின் புன்மைகளை எடுத்துக் காட்டிப் பகுத்தறிவு ஊட்டுகிறது.