பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுள் ஒருவன் உருவாகிக் கொண்டிருக்கிறான்.

என்னை விட ஒரு பிச்சைக்காரன் வசதியானவன் என்பதைச் சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறாய் !

ஆனால்ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்! வெசுவியஸ் எரிமலை குமுறி எழுந்தபோது செல்வம் கொழுத்த பாம்பி நகரம் உருத் தெரியாமல் அழிந்தது போல் - நீயும் அழியப் போகிறாய் !

என்று சாபம் கொடுத் தா ன். காதற் போட்டியில் முதலாளித்துவத்திற்குப் படைக்கலன்களாக இருந்து துணைபுரிந்த மதம், கலை, இ லக் கி ய ம் , சமுதாய அமைப்பு யாவற்றையும் தன் எழுத்துச் சூறாவளியால் சுழன்றடித்தான். காதற்போட்டியில் ம னி த னு க் கு மனிதன் சமநிலையிலிருந்து போட்டியிட வேண்டும், என்பது அவனுடைய காதற்கொள்கை.

புரட்சிப் பயணத்தில் மிதவாதிகளாக இருந்த புஷ்கின், டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி ஆகியோரின் படைப்பு களைக்கூடத் தமது புரட்சி க் கப்பலிலிருந்து தூக்கிக் கடலில் வீசும்படி தனது இளைஞர் பட்டாளத்துக்குக்

கட்டளையிட்டான்.

120