பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ என்னை ஒதுக்கியது உண்மையென்றால் - ஒரு நாய், ரயில் சக்கரத்தில் சிக்கி அறைபட்டுத் தொங்கும் தனது காலைப் பரிதாபமாக இழுத்துக்கொண்டு நகர்வது போல், நானும் - தனியாக, கண்ணிரில் நனைந்த என் இதயத்தைச் சுமந்து கொண்டு நகர்ந்து செல்வதும் உண்மை!

(கால் சிசராய் அணிந்த மேகம்)

அடலேறு போல் ஆற்றலும், பெருமிதமும் மிக்க ருசிய ‘சாம்சன் , லில்லி என்ற ஒரு பெண்ணின் முன்னால் கூனிக் குறுகி எவ்வளவு சிறிய லில்லிபுட்டன்' ஆகிவிட் டான் பார் த் தீ ர் க ளா ! ஆனால் அந்தத் தோல்வி மாயகோவ்ஸ்கியை ஆயிரம் யானை பலத்தோடு கிளர்ந் தெழச் செய்தது. ஏழைகளின் காதலைக்கூட ஈவு இரக்க மில்லாமல் தட்டிப் பறிக்கும் முதலாளித்துவ சமுதாயப் பின்னணியைத் தன் தீக் கண்களால் பார்த்தான். அதை நோக்கி -

"நான்

என்னைப் பொருத்த வரை

மிக மிகச் சிறியவன்

என்பதை உணர்கிறேன்.

ஆனால் -

யாரும் எதிர்க்க முடியாதபடி

1 1 9