பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணத் தி ட ம் அவர்கள் கொடுத்துவிட்டுச் செல்வது

வழக்கம். இரண்டு மூன்று நாட்கள் கழித்து, பிணம்' தம் நண்பர்கள் கூட்டத்தோடு இயல்பாக வந்து கலந்து கொள்வார். அடுத்த ஆண்டு நவம்பர் தொடங்கும் வரை அவருக்கு இதுபோன்ற தொல்லை இருக்காது. நண்பர்கள் ஆண்டுதோறும் ந ட த் தும் இச்சடங்கைத் திருவாளர் பிணம் ஈடுபாட்டோடு ஏற்றுக்கொள்வார். மனம் சிறிதும் வருந்த மாட்டார்.

நெருடா பர்மாவில் சிலிநாட்டுப் பிரதிநிதியாகப் பணி புரிந்து கொண்டிருந்தபோது , அழகிய ஒரு பர்மியப் பெண்ணின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. கொஞ்ச நாள் அவளோடு அவர் வாழ்க்கை நடத்தினார். அவள் வெளியில் செல்லும்போது, ஒர் ஆங்கில மாதைப் போல் உடையுடுத்திக் கொள்வாள் ; தன் பெயரையும் ஜோஸி பிலிஸ் (dosie Bliss) என்று கூறிக்கொள்வாள். வீட்டுக்கு வந்ததும் ஆங்கில உடையைக் களைந்து விட்டு பர்மிய உடையான 'சராங் (Sorong) அணிந்து கொள்வாள்; தன் பர்மியப் பெயரைக் கூறிக்கொள்வாள்.

அவள் உறவு கொஞ்சநாள் சுகமாக இருந்தது. பிறகு முள்ளாக உறுத்தத் தொடங்கியது. ஜோசியின் முகம் கூட்டுப் புழுவாகியது. பேச்சைக் குறைத்துக்கொண்டாள். நெருடா எப்போதும் தன்னைப் பிரியாமல் இருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். தன்னிடத்தை வேறு எந்தப்பெண்ணாவது வந்து பிடித்துக் கொள் வாளோ என்ற அச் ச மும் பொறாமையும் அவளை ஆட்கொண்டன. சிலசமயங்களில் உணர்ச்சி வசப்பட்டுக் கத்துவாள். நெருடாவுக்கு வரும் கடிதங்களையும், தந்தி களையும் கூட எடுத்து ஒளித்து வைத்துக் கொள்வாள். திறந்த, அழகிய அவளுடைய வெல்வெட் பாதங்களும் , வண்ணப் பூங்கொத்தோடு வசீகரிக்கும், அடர்ந்த அவள்

及25