பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரலில் அ ம ர் ந் தி ரு க் கு ம் வெண்சுருட்டுச் சாம்பலால் ஏதேனும் சி த் தி ர ம் தீட்டப்பட்டிருக்கும். கவிஞர் அப்போது வந்து போயிருக்கிறார் என்று புரியும்' என்று மன்னர் மன்னன் குறிப்பிடுகிறார். இதேபோல வேறொரு செய்தியை நான் எனது நூலான 'பாவேந்தர் நினைவுகளில்" பதிவு செய்திருக்கிறேன். சென்னை ராமன் தெரு வீட்டில் பாவேந்தர் இ ரு ந் த .ே பா து, குற்றிய லுகரத்தைக் க வி ைத யி ல் எ வ் வா று கையாளுவது என்பதைப் பற்றி எனக்கு ஒரு தாளில் எழுதி விளக்கிக் கொண்டிருந்தார் . அப்போது தாளில் மை சிந்திவிட்டது. உடனே தமது ஆள்காட்டி விரலால் அந்த மையை ஒரு மலராக மாற்றிவிட்டார். நான் ஒருமுறை விஸ்வபாரதி சென்றபோது, த ா கூ ரி ன் கையெழுத்துப் படிகளைப் பார்க்கும் வாய்ப்பு எற்பட்டது. அவரும் பாவேந்தரைப் போலவே சிந்திய மையைத் தாளில் ஒவியமாக்கியிருந் ததைப் பார் த் தே ன். இதுபோன்ற குழந்தைத்தனம் கவிஞர்களுக்குப் பெர்துவானது.

இதேபோல் மற்றுமோர் நிகழ்ச்சியை அவருடைய ஆசிரியப் பணியிலிருந்து மன்னர் மன்னன் குறிப்பிட்டிருக்கிறார். முதற்பாடப் புத்தகம். தமிழாசிரியர், பயிற்சியைத் தொடங்கிடப் புத்தகத்தைப் பிரிக்கிறார் முதற்பக்கம்: இவர் நமது ராஜா. இவர் இங்கிலாந்து நாட்டின் சக்கர வர்த்தி. இவர் பெயர் ... என்ற பாடமும், இங்கிலாந்து நாட்டுப் பேரரசரின் படமும் பொறித்திருக்கிறார்கள்.

பாவேந்தருக்கு மீசை படபடக்கிறது. நரம்பு முறுக்கேறு கிறது. மடையனுங்க என்று அரிமாக்குரல் எழுப்பு. கிறார். எதிர் உள்ள சிறுவர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

பாரதிதாசன் பாடநூலை மூடி வைத்துவிட்டுக் கரும் பலகையில் ஒரு நாயின் படத்தை எழுதிவிட்டுத் தன் இருக்கையில் அமர்கிறார்.

25