பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பாகவும் எழுத முயற்சித்தால் என்ன என்று சித்திக்க லானார். ஓரிரு பாடல்களை எழுதி, தம்முடையது என்று சொல்லாமல் தம்முடைய நண்பனுடையது எ ன் று .ெ சா ல் லி ப் பாரதிதாசனிடம் காட்டியிருக்கிறார். தம்முடையது என்று சொல்லிக் கொள்ள அச்சம்! பாரதி தாசன் உள்ளத்து உணர்ச்சிகளைப் பச்சையாக வெளிப் படுத்துபவர். அவரிடம் பாராட்டுப் பெறுவது அவ்வளவு எளிதன்று. ஊம் நல்லாத்தா இருக்குது என்று சொல்லி விட்டாலே அது பெரிய பாராட்டு: பிழை இருந்தால் கசக்கி மூஞ்சியில் அடித்து விடுவார். உன்னையெல்லாம் எவ கவிதை எழுதச் சொன்னான்?' என்று, சொல்லி னாலேயே விளாசி விடுவார்.

சுரதா நீட்டிய கவி ைத ைய ப் பார்த்துவிட்டு ஊம் நல்லாருக்கு..... பக்குவப்பட்டவன் எழுதற கவிதை மாதிரி இருக்கு: என்று சொல்லியிருக்கிறார் பாரதிதாசன். அது சுரதா வளர்ச்சியின் முதற்படி. சுரதா-பாரதிதாசன் தொடர்பு இப்படி நான்காண்டுகள் நீடித்தது. சுரதா தம்மையறியாமலே தமக்குள் ஒரு புதிய வளர்ச்சியைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தார்.

16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை ஆங்கிலப் பேரரசின் பொற்காலம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். புகழ் பெற்ற முதலாம் எலிசபெத் பேரரசியின் ஆட்சிக் காலம் அது. ஷேக்ஸ்பியர், பென் ஜான்சன் போன்ற நாடக மேதைகள் அக்காலத்தில் கொடிகட்டிப் பறந்தனர். அவர்களை அடுத்து மெய்விளக்கக் கவிஞர்கள் (Metaphysical Poets) தோன்றினர். இவர்களது கவிதைகள், இவர் களுக்கு முன் எழுதப்பட்ட மறுமலர்ச்சிக் கவிதைகளின்றும் (Renaissance Poetry), சீர்திருத்தக் கவிதைகளின்றும் (Poetry of Reformation) arapgyud (ypsopust gyub 2-air artu–& கத்திலும் மாறுபட்டுப் புதிய பாணியில் தோன்றின.

43