பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முகம் உன் கண்ணிலும் உன் முகம் என் கண்ணிலும் தெரிகின்றன. நம் தூய உள்ளங்கள் நம் முகத்தில் தென்படுகின்றன. வடக்கில் குவியாத மேற்கில் சரியாதநம்மினும் சிறந்தஅர்த்த கோளங்களை எங்குக் காணமுடியும்?

இப்பாடலில் தன்னையும், தன் காதலியையும், பூமியின் இரண்டு அர்த்த கோளங்களுக்கு (Hemispheates) ஒப்பிடு கிறான். இரண்டு அர்த்த கோளங்கள் சேர்ந்ததுதான் பூமி உருண்டை. பூமியின் வடதுருவம் குவிந்தது; குளிர்ந்த பனி படர்ந்தது. பூமியின் மேற்குப் பகுதி சரிவானது.

இவர்கள் இருவரின் சேர்க்கையால் உருவாகியிருக்கும் காதல் உலகின் வடக்குப் பகுதி குவிவதும் இல்லை; குளிர் வதும் இல்லை; மேற்குப் பகுதி சரிவதும் இல்லை. இவ்விடத்தில் குவிதல் குறைவதற்கும் குளிர்ச்சி செயலற்ற தன்மைக்கும் (inaction), சரிவு காதற் சரிவுக்கும் (decline) குறியீடுகளாகக் கொள்ள வேண்டும். ஜான் டன் காலத் தில் புதிதாக வெளியிடப்பட்ட வானவியல் வல்லுநர் கெப்ளரின் கருத்துக்கள் இக்கவிதையில் உவமையாக்கப் பட்டுள்ளன. நாம் தமிழ்க் கவிதையில் காதலரின் நெருக் கத்தை மலரும் மணமும் போல் நகமும் சதையும் போல்’ என்று மிகச் சுலபமாகச் சொல்லி விடுகிறோம். ஆனால் ஜான் டன் இந்த 'நெருக்கத்துக்கு" உவமை கூற யூகோள சாத்திரத்தில் நுழைகிறார்; வடதுருவத்துக்குத் தொலை வான பயணத்தையும் மேற்கொள்கிறார். அவர் உழைப்பை நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

59