பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்தம்

சத்தென்றால் உள்ளதென்று பொருளாம்; உன்னைத் தழுவியபின் நானதனைப் புரிந்து கொண்டேன் சித்தென்றால் தன்னைத்தான் அறிவ தென்பர்;

தினையளவே நானென்னை அறிவேன்.

சுரதா இதழ் 15-3-68

விநோதமான கற்பனைகள்

Metaphysics-என்ற சொல், கவிதைத் துறையில் அடிபடத் தொடங்கியதும், ஆங்கில இலக்கியவாதிகள் அச் சொல் லுக்குப் பலவிதமாகப் பொருள் கூறத் தொடங்கினர். 'விநோதமான, நம்பத் தகாத, அதீத கற்பனையுள்ள' என்ற பொருள்களை அச்சொல்லோடு தொடர்புபடுத்தி எழுதினர். மேலும் விநோதமானதும் நம்பத் தகாததுமான அதீத கற்பனைகள், மெய்விளக்கக் கவிதைகளின் பண்பு என்றும் கருதத் தொடங்கினர். சில சமயங்களில் மெய் விளக்கக் கவிஞர்கள் பலவித உணர்ச்சிகளால் பின்னப் பட்டு, தாங்கள் கூறுபவை காரண காரியங்களுக்கு ஒத்து வருகின்றனவா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், புதிர் போலப் பூடகமாகக் கூறுவதும் உண்டு. சுரதாவின் படைப்புக்களிலும் இத்தகைய கற்பனைகளைப் பலவிடங் களில் காணலாம். பிறர் சொல்லாத மாதிரி புதுமையாகச் சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகச் சிலவிடங் களில் குழப்பமாகவும், சிலவிடங்களில் புதிர் போலவும், சிலவிடங்களில் நம்ப முடியாதபடியும் சுரதா பாடுகிறார்.

தன் கணவன் ரகுநாத சொக்கலிங்க நாயக்கன் இறந்த பிறகு விதவை மீனாட்சி அரியணை ஏறித் திருச்சியை ஆட்சி செய்கிறாள். தாயுமானவர் மீனாட்சியின் அரண் & The distinctive note of metaphysical poetry is the blend of

passionate feeting and paradoxical ratiocination.

– Sir Herbert Griet son

Ꮾ 8