பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

籌

சிலசொல் கேளிர்

இது அணிந்துரை அன்று: வாயில் : இதில் முறையாக நீங்கள் நுழைந்து சென்றால்தான் இந்நூலை - நான் எழுதியதன் நோக்கம் உங்களுக்கு விளங்கும்.

குயிலும் இளவேனிலும் ' - என்ற தலைப்பைப் படித்ததும், இந்நூல் ஏதோ உயிரியல் ( Biology ) சம்பந்தப்பட்டது என்று எண்ண வேண்டாம்.

குயில் கூவ, இளவேனில் தொடங்கும் என்பது இலக்கிய வழக்கு. குயில் கூவுவதைக் கேட்டு இளவேனில் தொடங்குகிறதோ, இளவேனில் தொடங்கியதைப் பார்த்துக் குயில் கூவுகிறதோ... எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் !

குயிலும் աոաաւոգպա தொன்றுதொட்டுக் கவிஞர் களுக்குக் குறியீடுகளாக இலக்கியவாதிகளால் எடுத்தாளப் படுகின்றன. குயில்கள் தேனினுமினிய தமது தீங்குரலால்,