பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

口 口 仁

கவிஞர் முருகுசுந்தரம், எம். ஏ.

இளவேனில் பருவத்தில் மலர்ச்சியைத் தோற்றுவிப்பது போலச் சில கவிக்குயில்களும் தாம் வாழுங் காலத்தில் தமது ஆற்றல்மிக்க படைப்புகளால் சமுதாயத்தில் புதிய இளவேனில்களைத் தோற்றுவித்து, மறுமலர்ச்சியுண் டாக்கக் காண்கிருேம். எனவே, இந்நூலுக்குக் குயில்களும் இளவேனில்களும்’ என்று பெயர் சூட்டியிருக்கிறேன்.

'அன்னம் திங்களிதழில் சில நேரங்களில் சில கவிஞர்கள்' என்ற கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கினேன். நோபல் பரிசு பெற்ற சிலிநாட்டுப் பெ ரு ங் கவி ஞ ன் பாப்லோ நெருடாவைப் பற்றிய கட்டுரை முதன்முதலில் அன்னத்தில் வெளியாகியது. அதைப் படித்த கவிஞர் மீரா கவிஞரின் வாழ்க்கை நிகழ்ச்சியோடு, அவர்கள்

கவிதைகளைப் பற்றியும் சுருக்கமாக எழுதுங்கள் என்று

கடிதம் எழுதினார்.

பிறகு ஃப்ரான்சுவா வில்லன், போதலேர், மாயகோவ்ஸ்கி, லார்கா ஆ கி ய கவிஞர்களைப்பற்றிச் சற்று விரிவாக எ ழு தி னே ன் . அன்னம் நின்றது . என் கட்டுரைத் தொடரும் நின்றது. அன்னத்தில் வெளியான அக் . கட்டுரைகள் யாவும் இந்நூலில் இடம் பெறுகின்றன.

பாவேந்தரின் திருமகன் மன்னர் மன்னன் எழுதியுள்ள கருப்புக் குயிலின் நெருப்புக் குரல் ' என்ற நூலை மையமாக வைத்து, புதுவைப் பல்கலைக் கழகத்தில் ஒர்