பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

சூழ்ச்சிக்கஞ்சாத அறிஞன் வருவ தறிந்து சொல்வதிலே வல்லவர் உமர்கய் யாமென்றே அரசாண் டிருந்த சுல்தானும் அதிகம் மதிப்பு வைத்திருந்தார். உமரைக் கேட்டுக் கேட்டுத்தான் ஒவ்வொரு செயலும் அவர்செய்தார் உமரை மிகவும் மதித்ததனால் உயர்ந்த நிலையில் வைத்திருந்தார். ஒருவன் ஆடிப் பிழைப்பவனாம் உமரின் மதிப்பைக் குறைத்திடவே இருந்தான் காலம் பார்த்திருந்தான் எப்போ தென்று காத்திருந்தான். நாடு பிடிக்கப் புறப்பட்ட நல்ல சுல்தான் உமரையும் கூட அழைத்துச் சென்றாரே கூத்தா டியும்தான் சென்றானே. போரில் நமக்கே வெற்றியெனப் புலவர் சொன்ன சொற்படியே நேரில் வெற்றி கண்டதனால் நெஞ்சு மகிழ்ந்தார் சுல்தானே.