பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


திருமணப் பரிசு

உலகெலாம் வென்றவன் அலெக்சாந்தர் ஒருமுறை மகிழ்வுடன் அமர்ந்திருந்தான் பலபல வணக்கங்கள் செய்தபடி பார்த்திட வந்தனன் ஒர்ஏழை. ஆயிரம் முறையவன் மண்டியிட்டான், அடியிணை தொட்டனன்; முத்தமிட்டான்; வாயெலாம்.பல்லெனச் சிரித்துநின்றான்; பலபல புகழ்ந்தவன் பேசிநின்றான்! அன்புடன் அவனிடம் அலெக்சாந்தர்

யாது.நீ வேண்டுவ?? தெனக்கேட்டான்

என்மகள் திருமணம் நிறைவேற - இயன்றதை உதவிட வேண்டுகிறேன் கண்ணென வளர்த்தபெண்; ஒருவனிடம் கைப்பிடித் தளித்திட விழைகிறேன் எண்ணமி திருந்தென்ன? பணமில்லை; என்னர சேதுணை யெனவந்தேன்!?? ஏழையின் துயரினைத் துடைப்பதற்கே எண்ணமும் கூடிய தாகையினால் தாழையின் மடலென அருள்பரப்பும் . தண்ணளி கொண்டவன் எழுகென்றான்.