பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


பாட்டு நூலின் தாள்புரட்டிப் பார்த்தார் புரட்சிப் பாவேந்தர் ஒட்டை விழுந்த பாணையென உள்ள பாட்டுப் பலகண்டார். அங்கும் இங்கும் பலபிழைகள் அவற்றைச் சுட்டிக் காட்டிடினோ தங்க நண்பர் மனம்நோகும் தம்பிக் குள்ளம் தளர்ந்துவிடும். என்ன செய்வ தெனப்புரியா தேங்கி யிருந்தார் பாவேந்தர் மின்னல் போலே ஒருகருத்து மேவிற் றுளத்தே களிப்புற்றார். பேனா எடுத்தார் தாளின்மேல் பிறந்த தொருநற் பாயிரமே! தேனாய் மதித்து வாங்கினரே தேடி வந்த நண்பர்களே. நல்ல செய்யுள் நூலிதனை நாடித் திருத்திப் படித்தாலே வெல்லம் போலே இனிப்பாகும் வேண்டும் சுவைகள் பெற்றிடலாம் இவ்வா றந்தப் பாயிரத்தில் எழுதி யிருந்தார் பாவேந்தர் ஒவ்வா. தவர்க்கும் உவப்பாகும் உரைகள் தமிழில் பெய்திடலாம்!