பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58



குயில் ஒரு குற்றவாளி

வண்ணப் பறம்பு மலைக் காட்டில்-ஒன்றி வாழ்ந்த பறவைக் கூட்டமெலாம் விண்ணைக் கலக்கிப் பறந்தபடி-ஒரு வெட்ட வெளியில் கூடினவாம்!

குற்றம் செய்யும் குயில்அதனை - நீதிக் கூண்டில் ஏற்றித் தீர்ப்புரைக்க சுற்றம் சூழப் பறவையெலாம்-அங்குச் சூழ்ந்து கூட்டம் கூடினவாம்!

அகவை முதிர்ந்த கான்கோழி-பெரிய ஆந்தை யோடு மரங்கொத்தி மிகவும் உயர்ந்த நெறித் தலைவர்-ஆக மேன்மை யோடு வீற்றிருந்தார் கானக் கோழி யார் எழுந்தார்-ஒரு கனைப்புக் கனைத்துப் பேசுகிறார் வானக் கடவுள் சான்றாக- இங்கு வந்து பேசாய் பூங்குயிலே!

அறமன் றத்தில் பொய்யுரைகள்-பேசல் ஆகா திதனை யறிந்திடுவாய் குறைகள் உன்மேல் பலர்சொன்னார்டஅவை கூறு கின்றேன் கேட்டிடுவாய்