பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


தோட்ட மரங்கள், இலைகளிலே-ஓட்டைத் துளைகள் போட்டே எழில்கெடுக்கும் காட்டுப் பூச்சி புழுக்கள்தமை-விழுங்கிக் காட்டைக் குயிலே காப்பாற்றும்! பயறும் நெல்லும் தின்பீர்கள்-சுவைப் பழங்கள் பலவும் தின்பீர்கள் துயரம் நல்கும் புழுக்களையோ-தின்னும் தொண்டு செய்ய மாட்டீர்கள்! கம்பளிப் புழுவை உணவாக-உயர் காட்டுக் கோழி தின்றிடுமோ? வம்பு பேசும் ஆந்தையுடன்-மற்ற பறவைக் குலங்கள் தின்றிடுமோ? கன்னங் கருத்த குயிலன்றோ-அந்தக் கம்பளிப் புழுவைத் தின்றொழிக்கும் இன்னல் நீங்கிக் காடெல்லாம்-இன்று இருக்கச் செய்யும் தெரியாதா? நம்காட்டுக்குத் தொண்டு செய்யும்-அந்த நல்ல குயிலைத் தண்டித்தால் தன்பாட்டுக்குப் பழந்தின்னும்-பெருந் தலைவர்க் கென்ன தண்டனையோ? உழைத்துப் பிழைக்கும் மரங்கொத்தி-இவ் உண்மை எடுத்துக் கூறியதும் அழைத்துக் குயிலைப் பறவையெலாம் அன்பாய்ப் பேசி மகிழ்ந்தனவாம்!