பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o முருகுசுந்தரம், 15

பாவேந்தரைப்பற்றிக் குமரிமலர் ஆசிரியர் ஏ. கே. செட்டியார்

பாவேந்தருக்கு. வாழ்க்கையில் இரண்டே விருப்பம் தான் உண்டு. ஒன்று கவிதை; மற்றொன்று மீசை.

காடைக் கனவு

வாணியம்பாடியில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இராவண காவிய ஆசிரியர் புலவர் குழந்தையும் கலந்து கொண்டார். பாவேந்தர் முதல்நாளே வந்துவிட்டார். பாவேந்தர் புலால் விருப்பம் உடையவர் என்பதை அறிந்து விழாக் குழுவினர் ஐயா இப்பக்கம் காடை அதிகமாகக் கிடைக்கும். நாளை உங்களுக்குக் காடைக் கறி சமைத்துப் போடுகிறோம் என்று கூறினர்.

அடுத்த நாள் மதியம் உணவு பரிமாறப்பட்டிருந்தது. இலை முன் அமர்ந்த பாவேந்தர் இதில் எது காடைக் கறி?' என்று கேட்டார்.

"ஐயா! இன்று காடை கிடைக்கவில்லை. அதனால்...! என்று பயத்தோடு கூறினர் விழாக்குழுவினர்.

பாவேந்தர் கோபத்தோடு இலையைத் தூர இழுத்து விட்டார்; மீசை துடித்தது. இன்று கட்டாயம் காடை கிடைக்கிறதா இல்லையா என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் என்னிடம் ஏன் சொன்னாய்! நான் அதையே நினைத்துக்கொண்டிருந்தேனே!”என்று சீறினார். அவரைச் சமாதனம் செய்து சாப்பிட வைப் பது பெரும்பாடாகிவிட்டது.

கண்ணால் பருகினார்

1956ஆம் ஆண்டு குழித்தலையில் தமிழ் ஆட்சி மொழி மாநாடு நடைபெற்றது. இளமுருகு - பொற்செல்வி இம்மாநாட்டை முன்னின்று நடத்தினர். குன்றக்குடி