பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று டி. ஆர். எஸ். கருதினார். ஆனால் அவர் நினைத்தது நடைபெற வில்லை.

சின்னப்பா மிகச்சிறந்த நடிகர். அவருக்கு ரிகர்ஸ்லே’ தேவையில்லை. நடிக்க ஆரம்பித்தால் மளமளவென்று "டேக் எடுத்துவிடலாம். நடிக்க வரும்போது இளம் போதையில்தான் வருவார். போதை சற்று அதிகமாக இருந்து, அவர் நடிப்பில் யாராவது குறுக்கிட்டால் தகராறுதான். அவர் நடிக்கும் போது நான் எப்போதும் அருகில் இருக்க வேண்டும். அடிக்கடி பி யூ சி. (பி. யூ. சின்னப்பாவின் சுருக்கம்) பி. யூ.சி. என்று சொல்லித் தட்டிக்கொடுத்து வேலை வாங்கிவிடுவேன்.

சுலோசனா படத்துக்குப் பாடல் ரெகார்டிங்" ஆகிக் கொண்டிருந்தது. சர்வ ஜீவ தயாபரனே' என்ற பிலகரி ராகப் பாடலைச் சின்னப்பா பாடிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது. டி. ஆர்.எஸ். கடுமையாகக் கண் டித்தார். கோபம் வந்துவிட்டால் பெரிய நடிகர்களை யும் அடே' என்று தான் திட்டுவார். சின்னப்பா கோபித்துக்கொண்டு போய்விட்டார். பிறகு அவர் மாடர்ன் தியேட்டர் ஸாக்குள் நுழையவில்லை.

சின்னப்பா வீரவசனம் பேசி நடிப்பதில் மிகவும் வல்ல தர். அவரை உள்ளத்தில் நினைத்துக்கொண்டுதான் இந்திரஜித்துக்கு பாவேந்தர் வசனம் எழுதியிருந்தார். சின்னப்பா போனபிறகு அப்பாத்திரத்திற்கு யாரைப் போடுவது என்பது பெரும் பிரச்சனையாகிவிட்டது. கடைசியில் டி.ஆர்.எஸ். தாமே இந்திரஜித் பாத்தி ரத்தை ஏற்று நடிக்க முடிவு செய்தார். பாவேந்தருக்கு இந்த முடிவு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. அவர் நேராக டி. ஆர்.எஸ். அலுவலகத்திற்குச் சென்று நீ தான் ஹீரோ பண்ணப் போறயாமல்ல?' என்று கேட் டார். அவரும் 'ஆ. மா’ என்றார். டி.ஆர்.எஸ்ஸை 'நீ என்று ஒருமையில் பேசும் தகுதி பாவேந்தர் ஒரு