பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. முருகுசுந்தரம்/55

னிஸ் வீட்டின் ஒரு பகுதியில் பாவேந்தரின் அலுவலகம் இருந்தது. ஒருநாள் பாவேந்தரும் நானும் இரண்டா வது படம் பார்க்கச் சென்றோம். முதல் ஆட்டம் இன் னும் அந்தக் கொட்டகையில் விடவில்லை. பாவேந்தர் வெளியில் ஒட்டியிருந்த சினிமா போஸ்டர்களையெல் லாம் மெதுவாகப் பார்த்துக்கொண்டு உள்ளே நுழைந் தார். அங்கே நின்று கொண்டிருந்த வாயில் காப் பாளன் "யாரது? வெளியே போய்யா!' என்று அவரை விரட்டினான். "யாரைப் பார்த்து வெளியே போகச் சொல்ற என்று சொல்லி அவனை அடித்து விட்டார். உடனே உள்ளே இருந்த கொட்டகை முதலாளி, மேனே ஜர் எல்லாம் ஓடி வந்து இவரைச் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றனர்.

ஒருநாள் ஒரு 35 வயதுப் பெண்ணொருத்தி இவர் அலுவலகத்துக்கு வந்தாள். அவள் ஆந்திராக்காரி. ஏதோ கோவில் கட்டுவதற்கு நன்கொடை கேட்டாள். * இருக்கற கோயிலுக்குப் போறதுக்கே ஆளைக்காணம். நீ வேற கோயில் கட்டறயா? அது கிடக்கட்டும். உனக் குச்சமைக்கத் தெரியுமா?’ என்று பாவேந்தர் கேட்டார்.

  • தெரியும்?' என்றாள் அவள்.

'சரி ஒருவேளை சமை பார்ப்போம்! ஆந்திராக்காரி... கொஞ்சம் காரம் அதிகமா இருக்கும். பரவாயில்லை!” என்று சொன்னார். பிறகு அவளைச் சமையல் காரி ஆக்கிவிட்டார்.

பாவேந்தர் முன்கோபக்காரர் என்பது நாடறிந்த செய்தி. என்றாலும் நண்பர்களிடம் பழகும் போது மிகவும் எளி மையானவர். அன்போடு உபசரிப்பார். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். தமக்குத் தெரியாத செய்தியை வேறு யாராவது சொன்னால் வியப்போடு கேட்பார். அதை மற்றவர்களிடமும் கூறிப் பாராட்டுவார். சில புலவர்களிடம் காணும் குற்றங்களைச் சுட்டிக் காட்டி