பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

921குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

பாண்டியன் பரிசு படப்பிடிப்புக்காகப் பாவேந்தர் சென்னை தியாகராயநகர் இராமன் தெருவில் தங்கி யிருந்தார். நானும் என் மனைவியும் அவரைப் பார்க் கச் சென்றோம். மகிழ்ச்சியோடு வரவேற்றார். பிறகு என் மனைவியின் கையைப்பிடித்து இந்தக் கையில் சுவையாகச் சாப்பிட்டு நீண்டநாள் ஆயிற்று’ என்று சொன்னார். பாவேந்தரை அழைத்துப்போய் எழுத் தாளர் அகிலன் வீட்டில் ஒரு நாள் சைவ உணவும், ஒவி யர் மணியம் வீட்டில் இரண்டு நாள் புலால் உணவும் என் மனைவியைச் சமைத்துப் போடச் சொன்னேன். விருப்புடன் உண்டார்.

ஆனந்த விகடன் இதழிலிருந்து ஒருமுறை மலருக்குப் பாடல் வேண்டுமென்று எழுதிக் கேட்டிருந்தனர். "பார்ப் பான் பத்திரிகைக்கா! மாட்டேன்’ என்றார். கவிதை எழுதி அனுப்புங்க. பத்திரிகை பார்ப்பான் பத்திரிகைதா! படிக்கறவ எல்லாம் தமிழந்தானே?’ என்று நான் சொன் னேன். அப்படியா! சரி!' என்று சொல்லிக் கவிதை எழுதிக் கொடுத்தார். ரூ. 5011-க்குச் செக் எழுதிக் கொடுத்துவிட்டுப் பாவேந்தரிடம் கவிதை வாங்கிக்

கொண்டு போனார்கள்.

'எண்ணுால் தமிழனது நூல் அது இலங்கை போய் சாங்கியம் என்ற பெயரோடு திரும்பி வந்தது. தமிழன் கொடுத்ததைச் சாங்கியக்காரர் திருப்பிச் சொல்கிறார்’ என்று பாவேந்தர் ஒருமுறை கூறினார்.

குதிரை வண்டியில் செல்லும் போது காலைக் கீழே தொங்கப் போட்டுக் கம்பியைப் பிடித்துக்கொண்டு வரு வார். இது அவரிடத்தில் உள்ள ஒரு குழந்தைத்தனம்.