பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு 97 இடம் உண்டு. 'எந்தப் பட்டணம் எப்படிக் கொள்ளை போனாலும் சரி, எந்த ஏழை மனம் எப்படிப் பரிதபித்தா லும் சரி, என் அநுட்டானத்துக்குப் பங்கம் வராமல் என் ஆன்மாவை நான் பாதுகாப்பேன்’ என்று கூறும் பரம சுயநல வாதிகட்கு இது சவுக்கடி தருவதாகும். நகைச் சுவையுடன் எள்ளலும் கலந்து நம்மை இன்புறுத்துவதை இதில் கண்டு மகிழலாம். பாரதியாரின் குயில் பாட்டு’ இன்னிசை கொட்டும் கவி தையின்பம் செறிந்த தமிழ் நூல்களில் சிறந்ததொரு கற்பனைப் படைப்பு: கலை மெருகிட்ட ஒர் அற்புதச் சொல் லோவியம். எளிய பதங்களும் படிப்போர் மனம் கவரத்தக்க நல்ல சந்தநயக் கொழிப்பும் அடங்கியுள்ளமையால் அதிகப் புலமையில்லாத தமிழர்களும் பொருள் தெரிந்து மன முருகிப் பாட்டை அநுபவிக்கலாம். தமிழ் இலக்கிய மறு மலர்ச்சியின் அற்புதச் சொல்லோவியமாகத் திகழ்வதையும் கண்டு மகிழலாம். இந்தச் சிறந்த கவிதைப் படைப்பினால், பண்டிதர்கள் கடத்திச் சென்ற பைந்தமிழ்க் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்த காவல் நிலையம்!” என்ற புதுக் கவிஞரின் கருத்தும் ஒருவாறு தெளிவாகின்றது. கவிதை நெறியில் புது மரபினை அமைக்கவேண்டும் என்ற பாரதியாரின் பேரவாவையும் காணமுடிகின்றது. கவிஞர் அந்த முயற்சியில் வெற்றியையும் அடைந்துவிட்டார் என்ற உண்மையையும் தெளிவாக உணர முடிகின்றது. 13. கவிஞர் வாலி-பாரதி ஒரு பிள்ளையார் சுழி (கல்கி. விடுமுறைச் சிறப்பு மலர்-1981) கு?ை