பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii குயில் பாட்டு ஆகிய இம்மூன்றனுள் இறுதியில் குறிப்பிட்ட ஆயிற்பாட்டே மிகச் சிறந்தது என்பது பலரது கொள்கை யாகும். ஒரு கவிதையைச் சுவைத்துக் கூறுகின்றவர்களின் கருத்துகளெல்லாம் அவரவர்களுடைய உணர்ச்சியையே சார்ந் இருக்கும் என்று கொண்டால் இந்தக் குல்சி வாதத்திற்கு இடந்தாது. பல்லாண்டுகளாக யான் இந்தக் கவிதையைச் சுவைக்கும்போது குமிழியிட்டெழுந்த என் கருத்துகள் பாரதியாரின் நூற்றாண்டில் நூல் வடிவம் பெற்றுத் தமிழ் கூறு நல்லுலகில் நடையாடுகின்றன. பாரதியாரின் படைப்பு களில் ஈடுபாடு கொண்டவர்கள் என்னுடைய இந்தச் சிறிய நூலிலும் தம் கவனத்தைச் செலுத்துவார்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை. அத்தகைய பேற்றினை இந்நூல் பெறுமானால் அதனை என் பெறற்கரிய பேறாகக் கருது 哆 வேன். இந்த நூலை அழகுற அச்சிட்டும், நன்முறையில் கட் டமைத்தும் தந்த நாவல் ஆர்ட் அச்சகத்தின் அதிபர், கவிஞர் திரு. நான் நாச்சியப்பன் அவர்கட்கு என் நன்றி கலந்த அன்பினைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய டாக்டர் ஆர். கே. நாகு என் உடன் பிறவாச் சகோதரர் போன்றவர். நான் டாக்டர் பட்டம் பெறுவதற்குமுன் அப்பட்டத்தைப் பெற்றவர். டாக்டர் மு. வரதராசனின் பல நன்மாணாக்கர் களில் ஒருவர். தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களை பழுதத ஒதிப் பயன் பெற்றவர். அடக்கமான பண்புடையவர். எளிமையாக மாணாக்கர்களிடம் பழகினாலும் ஒழுங்குமுறை யையும் நன்னடக்கையையும் வற்புறுத்துபவர். இக்காலத் திலும் மாணவர்கட்குப் பொறுப்புடன் கற்பித்து அவர்கள் பாராட்டுதலைப் பெற்றவர்! இத்தகைய பண்புடைய நல்லாசான் இந்நூலுக்கு உவந்து அணிந்துரை வழங்கின மைக்கு என் அன்பு கலந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.