பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலின் முற்பிறப்பின் வரலாறு }% நெட்டைக் குரங்கன் நீண்ட மரம்போல எட்டி நிற்பதை மாடனும் காண நேரம் இல்லை. நீங்கள் இருவரும், தேவசுகம் கொண்டு விழியே திறக்கவில்லை. ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி ஒங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு மாடனும்தன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே ஓடிவந்தான்; நெட்டைக் குரங்கனும் வாளோங்கி வந்த ரன் ஒரே காலத்தில் இரண்டு வெட்டுகளும் வேந்தன்மீது வீழ்ந்தன. மன்னவனும் சட்டென்று திரும்பி வாளுருவி வீச்சிரண்டில் அந்த இருவரையும் வெட்டி வீழ்த்தினான். மாடனும் குரங்கனும் உடனே பிணமாயினர். மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்துவிட்டான். "நீயோ பெருந்துயருடன் மன்னவனை வாரியெடுத்து மடியின்மீது கிடத்திக் கொண்டு கண்ணிரண்டும் மாசி பொழிய வாய்புலம்பி நின்றாய். அப்போது காவலனும் கண்ணை விழித்து, பெண்ணே, இனிநான் பிழைத்திடேன்; சில்கணத்தே ஆவி துறப்பேன், அழுதோர் பயனில்லை சாவிலே துன்பமில்லை, தையலே இன்னமும்நாம் பூமியிலே தோன்றிடுவோம்; பொன்னே நினைக்கண்டு காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்; இன்னும் பிறவியுண்டு; மாதரசே இன்பமுண்டு, நின்னுடன் வாழ்வனினி நேரும் பிறப்பினிலே!' 4. மேற்படி, மேற்படி அடி (145-151) 5. மேற்படி, மேற்படி அடி (181-167)