பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலின் முற்பிறப்பின் வரலாறு 2} மாமுனிவர் செப்புகின்றார்: பெண்குயிலே,தொண்டை வள நாட்டில் ஒரு சோலையில் வேந்தன் மகன் நின்னைக் கண்டு நினது பாட்டில் கருத்திளகி நின்மேல் காதல் கொண்டு நிற்கையில், இரண்டு பேய்களும் பல மாயச் செயல்கள் செய்து பல பொய்த் தோற்றங்கள் காட்டி திறல் வேந்தனை ஐயமுறச் செய்து விடும். அரசனும் நின்னை வஞ்சகி என்று எண்ணி மதி மருண்டு நின்மீது வெஞ்சினம் கொண்டு நின்னைக் கைவிட நிச்சயிப்பான். பிந்தி விளைவதெல்லாம் பின்னே நீ கண்டு கொள்வாய், சந்தி செபம் செய்யும் சமயம் வந்து விட்டது' என்று பின்னர் முனிவர் காற்றில் மறைந்து விடுகின்றார். பின்னர் குயில் கவிஞரை நோக்கிப் பேசுகின்றது: 'காதலரே, மாமுனிவர் செப்பியவற்றை யெல்லாம் அப்படியே சொல்லிவிட்டேன். ஐயனே, இவற்றை நும் திருவுளத்தில் எப்படிக் கொள்வீரோ? யான் அறியேன். ஆரியரே, என்மீது காதல் புரிவீர். இல்லையெனில் சாதல் அருளி நும் திருக்கையால் என்னைக் கொன்றிடுவீர்?" என்று சொல்லிக் கொண்டே கவிஞரின் கையின்மீது வீழ்ந்தது. அவர் அக்குயிலை இன்ப வெறி கொண்டு முத்தமிடுகின்றார். முத்த மிட்ட அதே கணத்தில் குயிலைக் காணவில்லை. விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா! ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின் தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா! பெண்ணொருத்தி அங்குநின்றாள்: பேருவகைக் கொண்டுதான் கண்ணெடுக்கா தென்னைக் கணப்பொழுது நோக்கினாள்; சற்றே தலைகுனிந்தாள்; சாமி! இவ்வழகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும் ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவேனோ? மீள விழியில் மிதந்த கவிதையெலாம்