பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o குயில் பாட்டு:ஒரு மதிப்பீடு கற்பு நெறி, கன்னத்து முத்தம் ஒன்று என்பது களவு நெறி வின் செயல் முறைத் தொடக்கம்! சங்க இலக்கியங்கள் களவின்வழி வந்த கற்பையே’ சிறப்பாகப் போற்றியுரைக்கின்றன. பருவம் வந்த இளைஞர் பால் எழும் இன்ப உணர்ச்சியைக் காதல்’ என்றும், 'காமம்’ என்றும் இரண்டு பெயர்களால் வழங்கி வந்தனர் பண்டை யோர். தொடக்கக் காலத்தில் இந்த இரண்டு சொற்களும் ஒரே பொருளைத்தான் குறித்தன. நாளடைவில் காமம்’ என்ற சொல் தாழ்ந்த பொருளையே குறிப்பதாயிற்று. தற் சமயம் இச் ச்ொல் உடலுறவை மட்டிலும் சுட்டுகின்றது; காதல்"என்ற சொல் தெய்விக உறவைச்-ஆன்ம உறவைச்சுட்டுகின்றது. திருக்குறள் இன்பத்துப்பாலில் காமம்’ காதல்’ என்ற இரு சொற்களும் பொருளில் வேறுபாடின்றி பயின்று வருவதைக் காணலாம். பாரதியார் இந்த இரு சொற்கள் தெரிவிக்கும் நுட்பமான பொருள்களின் வேறு பாட்டை தெரிந்து தெளிந்துள்ளார். காதல் உணர்ச்சி என்பது என்ன! ஒர் ஆண் இதயமும் ஒரு பெண் இதயமும் இணைவதற்குத் துடித்துக் கொண்டி ருப்பதே அன்பு அல்லது காதல் என்று வழங்கப் படுகின்றது. வாயால் எடுத்துக் கூற முடியாத காதலன்-காதலி ஒற்றுமை யுணர்ச்சியைக் கவிஞர் ஒன்றுக்கொன்று இன்றியமையாத இணைப்புகள்மூலம் கண்ணம்மா. என் காதலி - (6) என்ற பாட்டில் மிக அற்புதமாக எடுத்துக் காட்டி விளக்குவதைப் பன்முறைப் படித்துப் படித்து அநுபவிக்க வேண்டும். இந்தப் பாடலை அநுபவிக்கும்போது குலசேகராழ்வாரின் திருமலை பற்றிய அதுபவம் நம் நினைவுக்கு வராமற் போகாது. திரு மலையில் தனக்கு குருகு, மீன், பொன் வட்டில், செண்பகம் தம்பகம் (புதர்), பொற்குவடு, கானாறு, மலை மேலுள்ள