பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலோ காதல் 35 விரைந்து எடுத்து அணைத்துக் கொள்ளுகின்றான். தலைவி யும் அவன் மேலே மெய்மறந்தவள்போல் கிடக்கின்றாள்.'" இதிலும் நானுக்கும் கற்புக்கும் நடைபெறும் போராட் டத்தைக் காண்கின்றோம். இந்தக் காதல் மரபினைப் பாரதியார் குயில் பாட்டில் அற்புதமாகக் கையாள்கின்றார். குயில் தன் முற்பிறப்பின் வரலாற்றை உரைக்கும்போது, பூரிப்புக் கொண்டாய் புளகம்நீ எய்துவிட்டாய் வாரிப் பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே நானந் தவிர்ந்தாய்; நனவே தவிர்ந்தவளாய் காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவிலே சேர்ந்துவிட்டாய், மன்னன்தன் திண்டோளை நீயுவகை ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச் சிந்தை கொண்டாய்.” என்று முனிவர் வாக்கில் வைத்து இது குறித்துப் பேசுவதைக் காணலாம். பொதுவாகக் களவுப் புணர்ச்சி நடைபெற்ற பின்னர் தலைவன் நின்னைப் பிரியேன்; பிரியின் தரியேன்” என்று சொல்லுவது வழிவழி வரும் காதல் இலக்கிய மரபு, தஞ்சைவாணன் கோவைத் தலைவன், பெண்கொடி யே!பிரி யேன்;தரி யேன்நிற் பிரியினுமே." என்று தன் காதலியிடம் கூறுவதைக் காணலாம். இத்தகைய மரபினை யொட்டியே குயில் பாட்டிலும், 28. கலி-37 (குறிஞ்சிக் கலி.1) 29. கு. பா. குயிலின் முற்பிறப்பின் வரலாறு அடி (108-114) 30. த. வா. கோ. 23.