பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டில் இயற்கை எழில் 45 நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன், நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப் பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னேயோ.* இந்தப் பகுதியில் இயற்கை எழுப்பும் இன்னொலிகளையெல் லாம் ஒரு பல்லுருவம் காட்டியில் (Kalaidoscope) வண்ணக் கோலங்களைக் காட்டுவதைப்போல் ஒரு சேரக் காட்டி நம்மைக் கவிஞர் மகிழ்விக்கின்றார். இசை இனிமை கொண்ட இந்த அடிகள் செவிக்கு இனிமை பயந்து பாட்டின் தரத்தை யும் பன்மடங்கு உயர்த்துகின்றது. இந்தப் பகுதியை எழுதும் கவிஞருக்குச் சிலப்பதிகாரம் கைகொடுத்து உதவியுள்ளது என்று கருதலாம். -நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி யாரம் படைத்த தமிழ்நாடு." என்று பாடினவரல்லவா? கோவலனும் கண்ணகியும் கவுந்தி யடிகளுடன் மதுரையை நோக்கிப் போகின்றனர்; காவிரி யாற்றில் செல்லும் நீரின் ஒலி இவர்கள் காதில் படுகின்றது. இதைத் தவிர பல்வேறு ஒலிகளையும் செவிமடுத்து நடந்து செல்லும் களைப்பையும் மறந்து செல்கின்றனர் என்று கூறுவர்.இளங்கோவடிகள். இவ்வொலிகளை அவர், கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கின் பழனத் தாமரைப் பைம் பூங் கானத்து, கம்புள் கோழியும், கனைகுரல் நாரையும், செங்கால் அன்னமும், பைங்கால் கொக்கு ம், 12. டிெ. டிெ, அடி (28-46) 13. தே. கீ. செந்தமிழ் நாடு-7