பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-7 பாட்டின் உள்ளுறை ‘குயில்பாட்டில் அடங்கிய கதையைப் பாரதியாரே 'பட்டப் பகலில் தோன்றும் நெட்டைக்கனவு’ நிகழ்ச்சி என்று கூறுகின்ற போதிலும், குயிற் பாட்டினைப் படிக்கும் ஒவ் வொருவரும் உண்மையில் பாட்டு கற்பனைக் காவியம்தானா? அல்லது அதற்கு உள்ளுறை ஏதாவது உண்டா?’ என்ற வினாக் களைப் போட்டு மண்டையை உடைத்துக் கொள்ளத்தான் செய்வர். பாட்டின் அமைப்பும், பாட்டின் கதை மாந்தக் களின் பேச்சு நடத்தையும் இந்த வினாக்களைப் பிறப்பிக்கச் செய்கின்றன என்று கருதுதல் வேண்டா. பாட்டை முடிக்கும் கவிஞரே இதனைச் சொல்லிவிடுகின்றார். மனிதன், பறவை, விலங்குகள் இவற்றைக் கதை மாந்தர்களாகக் கொண்ட நான்கு நாள் காதல் நாடகத்தை விரிவாகப் பேசிவிடு கின்றார். ஆனால் அதன் பிறகு, பாட்டை முடிக்கும் போது, சோலை, குயில், காதல் சொன்னகதை அத்தனையும் மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சிஎன்றே கண்டு கொண்டேன். என்று தனக்குச் சுயநினைவு வந்ததாகக் கூறிக் கதையை முடிக்கின்றார். இங்ஙனம் சுய நினைவு வந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. தான் கண்டது, அதனை நயமாகக் கவிதை