பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு யில் அமைத்தது இவை யாவும் வெறும் கற்பனை, பொய் மாயத்தோற்றம் என்று தள்ளிவிட அவரது மனம் ஒருப்பட வில்லை. அதற்கு ஒர் உட்பொருள் இருக்க வேண்டும் என் பதைச் சூக்குமமாகத் தெரிவிக்கின்றார். ஆன்ற தமிழ்ப்புல வீர் கற்பனையே யானாலும் வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ? என்கின்றார். பாட்டை ஒரு புதிர் போட்டு முடிப்பதுபோல் தோன்றுகின்றது. கற்பனைக் காவியத்திற்கு வேதாந்தப் பொருள் இருக்க வேண்டும் என்று விழைகின்றார் கவிஞர். இந்த வேதாந்தப் பொருள் உள்ளுறை யாகவும் இருக்க லாம்; ஆன்மிகமான பொருளாகவும் அமையலாம். இவற்றை ஈண்டுச் சிந்திப்போம். நம் நாட்டிலுள்ள புலவர்கள் எந்த விதமான கதையாக இருந்தாலும் அதில் கவிஞர் சிந்தித்தே இராத-உட்பொருளை உள்ளுறையை - வேதாந்தப் பொருள்களைத் தங்கள் மனம் போனபடிக் கற்பித்துக் கதையின் சுவையையே மறந்து சாத் திரத் தத்துவத்தில் ஈடுபட்டு மயங்குகின்றனர் என்பது சிலரது கருத்து. பேராசிரியர் கே. சுவாமிநாதன் 'செய்யுளானது தன் சொந்த பலத்தால் நிற்க வேண்டும். மதம், நெறி அல்லது தேசபக்தி என்ற கோலையூன்றி நிற்கலாகாது. இவ்வித சுய பலத்தையுடையது குயில்பாட்டு எடுத்துக்கொண்ட விஷயம் புதியதாய் இருந்ததனால்தான் இந்தப் பலம் சித்தித்தது.' என்பர், இதனால் சமயம்பற்றிய பொருள் குயில் பாட்டில்’ இல்லையென்று உறுதியாக அறுதியிட முடியாவிட்டாலும் இத் i. பாரதியாரின் 'குயில் (கலைமகளில்- 1935 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வெளிவந்த கட்டுரை}.