பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு கூறினால், "மேனி நலத்தினையும். வெட்டினையும் கட்டினையும்...திருத்த நிலையினையும் ... ... சொல்ல வசமாமோ?* நிகழ்ச்சியுரைக்கும் கவிதை வகையில் ஆங்கிலத்திலுள்ள arrrorificir "Go orgyito piluqûo (The Nun's Priest Tale) orgir Liği: Gurie?sır 'ıou?i# 3. b# 3. sırsı (The Rope of the Lock) என்பதும் முதன்மையாகக் கருதப்பெறுவனவாகும்; இவ் விரண்டிலும் அமைந்துள்ள அனைத்துப் பண்புகளும் குயில் பாட்டில் நன்கு அமைந்துள்ளன என்று கூறுவர் ஆங்கிலப் புலவர்கள். மேலும், அவர்கள் கதையின் கவர்ச்சியிலும் நகைச் சுவையிலும், கதைமாந்தரின் பேச்சின் இயற்கை அழகிலும், மகா காவிய இலக்கணங்களைப் புரளியாய்ப் பிரயோகிப்பதிலும், புதைந்து கிடக்கும் உட்பொருள்களிலும் செய்யுள் அடிகளைப் பொருளுக்கும் பாவத்திற்கும் ஏற்ப மாற்றி மாற்றிக் கையாளும் திறமையிலும் ஆங்கிலச் சிறு காவியங்களைச் தோல்வியுறச் செய்து விடும் குயில்பாட்டு என்றும் திறனாய்ந்து கூறுவர்". இதிகாசப் போலி வகையான காவியங்கள் தமிழில் அருமருந்து போன்றவை. இம்முறை யைக் 'குயில்பாட்டில் மேற்கொண்டு அச்சுவையை வெளிப் படுத்தியது பாரதியாரின் கவிதை நயத்தின் ஒரு மேன்மை யான கூறு ஆகும். நடை: கவிதையின் நடையோட்டத்திற்கு அகவலும், கலிவெண்பாவும், எண்சீர் விருத்தமும் சிறப்பாகத் துணை செய்யும். இவற்றையெல்லாம் நன்கு அறிந்து தெளிந்தவர் பாரதியார். 714 அடிகளையுடைய குயில் பாட்டு அகவல் நடைபோன்ற ஒரு நடையைக் கொண்டுள்ளது; வெள் 7. பாதியின் குயில் (பேராசிரியர் கே. சுவாமிநாதன் எழுதியது) கலைமகள்-தொகுதி. அ. 1935.(யுவ. ஆடி-மார்கழி தொகுப்பு)..பக் 222.