பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

குருகுலப் போராட்டம்

வேற்றுமை பாராட்டக்கூடாது என்று கருத்துரைத்து வந்தார். அரவிந்தர் பாரதியார் போன்றவர்கள் போற்றும்படியான நிலையில் இருந்தார்.

நாட்டு விடுதலையில் நாட்டங் கொண்ட ஐயர் ஆங்கிலம், தமிழ், வடமொழி, இலத்தின் ஆகிய பண்டைய மொழிகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஐயர் நாட்டிற்காகப் பல இன்னல்களை ஏற்றுக் கொண்ட ஐயர்.

இந்த நாட்டின் பண்பாட்டு அடிப்படையில் ஒரு குருகுலம் காண வேண்டும் என்று முனைந்தபோது, அதைத் தமிழகத்தில் உள்ள எல்லாத் தலைவர் களுமே வரவேற்றனர். அதற்கு நல்ல ஆதரவும் தர முன் வந்தனர்.

ஆனால் ஐயர் தொடங்கிய குருகுலம் ஒரு போராட்டத்திற்குக் காரணமாய் அமைந்துவிட்டது. வரகனேரி சுப்பிரமணிய ஐயர் என்ற பெயரைச் சுருக்கி வ.வே. சு. ஐயர் என்றுதான் பலரும் குறிப்பிடுவார்கள்.

ஐயர் காந்திய வாதியாக இருந்து பல புரட்சிக் கருத்துக்களைப் பேசுவார். சாதிவேற்றுமை கூடா தென்பார். ஆதிதிராவிடர்களுக்கும் வேதம் சொல்லிக் கொடுத்து பூனூல் அணிவித்து பார்ப்பனர் ஆக்கி விட்டால் வேற்றுமை ஒழிந்து விடும் என்பார். வான்மீகியை விட கம்பன் உயர்ந்த புலவன் என்று