பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காங்கிரஸ் செயற்குழுவில்
கருத்துப் போராட்டம்

1925ஆம் ஆண்டு சனவரி மாதம் 17ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூடியது. இந்தச் செயற்குழுவில், குருகுலத்தில் சாதிப்பிரிவினை பற்றி ஆராய மூவர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக் குழுவினர்

கணபதி சாஸ்திரி

வி. தியாகராசச் செட்டியார்

கே.எம். தங்க பெருமாள் பிள்ளை

ஆகியோர் ஆவர்.

இவர்கள் குருகுலம் சென்று நேரில் விசாரனை செய்து அறிக்கை கொடுத்தனர்.

குருகுலத்தில் சாதிவேறுபாடு நிலவுவது உண்மை தான் என்றும், அதை நடத்தி வரும் வ.வே. சு. ஐயரே இரண்டு பிராமணப் பையன்களுக்கு தனியாக உணவருந்த ஏற்பாடு செய்து கொடுத்தார் என்றும், இதை யொட்டிப் பார்ப்பனர்களுக்கு தனிப் பந்தி என்றும் மற்றவர்களுக்குத் தனிப்பந்தி என்றும்