பக்கம்:குறட்செல்வம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸111

"கடமைகளை முறையாகச் செய்தல் சிறந்த கடவுள் வழிபாட்டுக்கு ஈடு அல்லது இணையானது என்னும் பொருள்படச் சான்றோர் பலரும் பேசியிருக்கிறார்கள்.

கடமையே மிகச் சிறந்த நோக்கம் ஏனெனில் శ్రీశ్రీ! கடவுட் கருத்தைத் தழுவியதாக இருக்கிறது என்று விக்கார் டயரும், - • . . . . .

‘கடமையை விருப்பத்தோடு செய்பவர்களுக்குக் கடவுள் எப்போதும் உதவியாக இருக்கிறார்’ என்று கெப்லரும், - - - - -

‘கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்தல் அறிவை. யும் மனத்தையும் பலவீனப்படுத்தித் தூய்மையான தவ வாழ்க்கையைப் புதைத்து விடுகிறது என்று ட்ரயான் எட்வர்ட்ஸ் என்பாரும்,

'உயிர்கள் தம்முடைய கடமைகளை உடனடியாகச் செய்வதாக முடிவெடுத்துக் கொள்வது கடவுள் இதயத் தின் சந்நிதி' என்று பேகனும் பேசியிருக்கின்றனர்.

பக்திச் சுவை நளிை சொட்டச் சொட்ட சான்றோர் களின் வரலாற்றை நமக்கு அருளிய சேக்கிழார் பெருமானும் தவம் என்ற வாழ்க்கையை உலகியல் வாழ்க்கையோடு இணைத்துக் கூறுவதை நூல் முழுவதும் பரக்கக் காணலாம். . - -

சங்கிலியாருக்குச் சுத்தரரைச் சில்பெருமான் அறிமுகப்படுத்தும் போது, மேருவரையின் மேம்பட்ட தவத்தினான்’ என்று கூறுவதாக சேக்கிழார் பெருமான் சித்தரித்திருப்பது அறிந்து இன்புறத்தக்கது.

ஆதலால், திருக்குறள் காட்டும் தவம், தத்தம்

கடமைகளைச் செய்தல்; அவம், கடமைகளைச் செய்வா தொழித்துப் பிறவற்றைச் செய்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/113&oldid=1276415" இலிருந்து மீள்விக்கப்பட்டது