பக்கம்:குறட்செல்வம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. மழித்தலும் நீட்டலும்!

தவம் ஒரு சோதனைப் பட்டறை. பட்டறையில்

இடப்பட்ட பொன் தூய்மை பெற்று ஒளிர்தல் போல, தவத்தில் ஈடுபட்டோர் துன்பங்களால் தூய்மைபடுத்தப் பெற்று, ஒளி பெற்றுத் திகழ்தல் வேண்டும்.

துன்பம் இருவகையது. ஒன்று உடல்வழி வரும் பசி, நோய் முதலியன. பிறிதொன்று உயிர்வழி விருப்பு வெறுப்புக்களால் வரும் உணர்வுகள் ஆசைகள் முதலியன. இவ்விருவகைத் துன்பங்களையுமே கவலையின்றி, மகிழ்வுடன் ஏற்று அனுபவித்துத் திருவருளை நினைந்து வாழ்தல் தவம். - X

அதனாலன்றோ திருவள்ளுவர், 'உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை, அற்றே தவத்திற் குரு' என்று தெளிவாகத் தேற்றேகாரம் போட்டு அறிவுறுத்தினார். .

உற்ற நோய் நோற்றல் முதல் வகை. அந்நோயில் இருந்து விடுவித்துக் கொள்ள விரும்புதலும் விருப்பம், முயற்சி ஆகியவற்றின் காரணமாகப் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் பிறிதொரு வகை.

தவம் செய்யும் ஒரு பழக்கம் உடற் பழக்கம்-உயிர் பழக்கமும்கூட. உடலையும் உள்ளத்தையும் முறைப்படி பழக்குதல் எளிதன்று. கிண்ணத்தில் தண்ணிரை நிரப்பி, எடுத்து கொண்டு ஓடுவது போல. . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/120&oldid=701870" இலிருந்து மீள்விக்கப்பட்டது