பக்கம்:குறட்செல்வம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸125

முறைவைப்புக்கும் பொருள்காண പേങ്ങ@ഥാഖ്? துறவி பொருட்பற்றிலாதவர்; பொருள் தேடும் முயற்சியினின்றும் தன்னை விடுதலை செய்துகொண்டவர்.

அத்தகைய வாழ்வில் களவுக்கு இடமேது? களவினும் இருவகையுண்டு. வறுமையின் காரணமாக ஏற்படும் களவுணர்ச்சி ஒருவகை, பொருள் வந்தடைந்தபின் அதைப் பாதுகாத்துத் தமக்கே அல்லது தம்மை சார்ந்த ஒரு சிலருக்கே உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றும் களவுணர்ச்சி பிறிதொரு வகை. இவற்றில் முன்னையது பெருங்குற்ற்மன்று - மன்னித் தற்குரியது.

அறவிகள் சான்றோராக வாழ்வர். பலருடைய நலனுக்குப் பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டியவர் '. அதன் காரணமாகப் பொது மக்கள் தமது ஆன்ம ஆ°ள் உள்ளிட்ட பெருநலனைப் பாதுகாத்துக் கொள்ளும் இபாருட்டுத் துறவிகளிடம் தமக்குரியனவற்றை உரிய போழ்து செய்வார் என்று கருதி) நம்பிப் பொருளைக் கொடுத்து வைத்தல் உண்டு.

பின்னர், தரையில் ஒடிய நீர், தரையினை ஈரம் ஆக்குதல் போல, தீரத் துறவசதார் கையில் பொருள் புழங்கினாலும் பொருள்வழிப் பற்று அவர்களைச் சாரும்; அதுபோழ்துதான்் துறவுடையவர்களைச் சார் புடைய பெருநிறுவனங்கள் தோன்று கின்றன.

நிறுவனங்களின் தொடக்கம் அன்பு, அருள், துறவு ஆகியவைகளின் வழியதாகத் தோன்றிய பொதுமக்களின் நம்பிக்கை காலப்போக்கில் இது தலைகீழ்ப் பாடமாகி வரலாறு கறைபடுகிறது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/127&oldid=1276425" இலிருந்து மீள்விக்கப்பட்டது