பக்கம்:குறட்செல்வம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸129

ஆனால் பண்பம்ட அறிவு பகைமைக்கு அப்பாற் பட்டது. விவாதத்திற்குட்பட்டதல்ல. விளங்கவைக்கும் தகைமை உடையது. தண்ணளிமிக்கது. அறிவுடைமையை பற்றிப் பேசிய திருவள்ளுவர் அறிவினால் பெறும் பயன் பற்றியும் கூறுகின்றார். பிறருக்குப் பயன்பட வாழ்தலே சிறப்புடையதொன்று.

பொருள் வேறு பயன் வேறு. அறிவுடைமை வேறு. அதன் பயன் வேறு. இந்தத் தத்துவம் தெளிவாக விளங்கிக்கொள்ளப் பெறுதல் வேண்டும்.

இந்திய அரசின் உறுதி முத்திரையிட்ட நாணயத் திற்குத் தனியே ஒரு மதிப்பில்லை. அந்த நாணயத்தைக் கொடுத்து அதற்கு மாறாகப் பெறக்கூடிய பொருளை வைத்துத்தான்் (பண்டங்களை) நாணயத்துக்கு மதிப்பு.

அதுபோலவே அறிவுக்கும் அறிவுடைமையின் பயனாகத் திருவள்ளுவர் காட்டுவது கருணையேயாகும்.

பழனிமலை மீது வீற்றிருந்தருளும் இறைவனை வழிபட ஒரு பக்தர் போகின்றார். அவர் செல்வமுடையவர் அவர் மலைமீது ஏறிச் செல்லும்போது படிகளின் ஓரத்தில் இருக்கும் நோய்வாய்ப்பட்டு அவதி உறுவோருக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டு போகின்றார்.

திருவள்ளுவர் இந்தக் காட்சியைப் பார்க்கின்றார். தாம் எல்லாம் நினைக்கின்றோம், இந்தச் செல்வ பெருமகனை வள்ளுவர் பாராட்டுவார் என்று. ஆனால் வள்ளுவர் பாராட்டவில்லை.

அச் കൊ பெருமான் நோயாளிகளுக்கு அள்ளிக் கொடுத்ததை வள்ளுவர் சடங்காகக் கருதுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/131&oldid=1276429" இலிருந்து மீள்விக்கப்பட்டது