பக்கம்:குறட்செல்வம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். என்று குறிப்பிடுகிறார்.

தெய்வத்தான்் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும். கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டு அவர்க்கு. என்ற குறட்பாக்கள் முயற்சியின்பேராற்றலை வலியுறுத்து கின்றனவேயன்றி ஊழே வெற்றி காணும் என்று அறுதி யிட்டு உணர்த்தவில்லையே. -

புராண வழி பார்த்தாலும், ஊழின் வழி ஏற்பட்ட மரணத்தை முயற்சி வழி, பெற்ற நோன்பின் பயனாக வென்ற மார்க்கண்டேயன் வரலாற்றை நாம் பார்க். கிறோம்.

நிலத்தினுடைய இழுப்பாற்றல் விண்ணோக்கிச் செல்லும் பொருளை இழுத்துத் தள்ளும் வலிமை உடையதே ஆயினும், அதையும் தடுத்து நிறுத்தி வானத்தே மனிதன் மிதக்கவில்லையா?

ஆதலால், ஊழின் வலியையைவிட, நமது முயற்சியே வலிமையுடையது என்று கருதி முயற்சியுடைய வாழ்க்கை. வில் ஈடுபடுவோமாக!

முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/162&oldid=1276493" இலிருந்து மீள்விக்கப்பட்டது